செய்திகள்
முதல்வர் நாராயணசாமி.

மத்திய அரசு புதுவைக்கு ரூ. 995 கோடி வழங்க வேண்டும்- பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்

Published On 2020-04-07 14:05 GMT   |   Update On 2020-04-07 14:05 GMT
அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு புதுவைக்கு ரூ. 995 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் இதுவரை 4 பேர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காரைக்கால், மாகி, ஏனாமில் கொரோனா பாதிப்பு இல்லை. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இன்று (செவ்வாய்கிழமை) முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். பகல் 1 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்காது. மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்கும்.

கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும். நிவாரண நிதிக்கு சுமார் ரூ.5 கோடியை அரசு ஊழியர்களும், பொது மக்களும் கொடுத்துள்ளனர்.தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள், காப்பீடு நிறுவனங்கள், தாராளமாக கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவி செய்திட வேண்டும்.

மத்திய அரசின் பேரிடர் மீட்பு துறை பல மாநிலங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இதுவரை மாநிலத்துக்குத் தேவையான நிதி வழங்க வில்லை.

இடைக்காலமாக ரூ. 300 கோடி மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், கொரோனா நிதியாக ரூ.995 கோடியும் வழங்க வேண்டும்.பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் இதுவரை பதில் வரவில்லை.

புதுவை மாநில மக்களுக்கு, மாநில நிதியிலிருந்து ஒவ்வொரு ரே‌ஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கினோம். மத்திய அரசு, மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை.

சரக்கு மற்றும் சேவை வரியில் புதுவையின் பங்கான சுமார் ரூ.400 கோடி கொடுக்கவில்லை. மானியம் கொடுக்கப்படவில்லை. மத்திய அரசு, நமது மாநிலத் துக்கு ஒதுக்கிய பட்ஜெட் தொகையையும் வரவில்லை.

மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிதியுத வியை மாநில அரசின் மூலம் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசு பல உத்தரவுகளை பிறப்பித்தாலும், அதை நிறைவேற்றுவதற்கு தேவை யான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவ சமாக நிதியுதவி செய்ய வில்லை. வியாபார நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் வரவில்லை.

ஆனால் மாநில அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக புதுவைக்கு ரூ. 995 கோடியை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். பிரதமர் அதற்கு செவி சாய்ப்பார் என நம்புகிறேன்.

இனி வரும் காலம் இக்கட்டான காலம். இச்சமயத்தில் மாநில அரசு அனைத்து சுமைகளையும் ஏற்க முடியாது. மத்திய அரசு துணைக்கு வர வேண்டும்.

சீன நாட்டில் ஒரு மாவட்டத்துக்கு 3 பில்லியன் டாலர் செலவழித்து மக்களை காப்பாற்றினார்கள். பிரதமர் ஒதுக்கியுள்ள ரூ. 1.75 லட்சம் கோடி போதாது. மத்திய அரசு அறிவிப்பை மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது. நடைமுறையில் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

இனிவரும் காலம் சோதனையான காலகட்டம். கொரோனா பாதிப்பவர் களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’’

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News