செய்திகள்
ஜெயங்கொண்டம் பகுதிகளில் விதிமுறையை மீறிய 13 கடைகளுக்கு சீல்
வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் விதிமுறையை மீறிய 13 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
வரதராஜன்பேட்டை:
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்திருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று ஒரு டீக்கடை உள்பட 3 கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, அங்கு சென்று பார்வையிட்டு அந்த கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தார்.
இதேபோல் வரதராஜன்பேட்டையில் உள்ள 4 மளிகை கடைகளிலும் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் தேன்மொழி, அந்த கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தார். அப்போது ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
மீன்சுருட்டி பகுதியில் இயங்கி வரும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வர கூறுமாறும் கடைக்காரரிடம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கடந்த ஒரு வாரமாக அறிவுறுத்தி வந்தார். ஆனால் சில கடைகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப் படவில்லை.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் மண்டல துணை தாசில்தார் ஜானகிராமன், குண்டவெளி வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவருடைய மளிகை கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், நேரக்கட்டுப்பாடு கடைபிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது, தெரியவந்தது. இதையடுத்து அந்த மளிகை கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதேபோல் மேலணிக்குழி கிராமத்தில் உள்ள பாலு என்பவருடைய மளிகை கடைக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. இரண்டு மளிகை கடைக்காரர்களுக்கும் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமங்களில் உள்ள டீக்கடைகள் சமூக இடைவெளி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 டீக்கடைகளுக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முக கவசம் அணியுமாறும் அறிவுறுத்தினர். மேலும் கடை உரிமையாளரிடம் கடையை திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.