செய்திகள்
கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ரத்னா ஆய்வு

அரியலூர் மாவட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு

Published On 2020-04-07 19:24 IST   |   Update On 2020-04-07 19:24:00 IST
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்கள் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து அவர்களை கண்காணிக்கும் பணி, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தல், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்களை ஏற்பாடு செய்தல், குழந்தைகள் காப்பகம், ஆதரவற்ற இல்லங்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

மேலும், அவசர உதவி தேவைப்படுபவர்கள் மருத்துவ உதவிக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329-228709 மற்றும் 99523 36840 என்ற செல்போன் எண்ணிலும் அழைக்கலாம், என்றார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கோட்டாட்சியர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News