செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

கொரோனா நிவாரணத்துக்கு கவர்னர் கிரண்பேடி நிதி

Published On 2020-04-07 11:46 GMT   |   Update On 2020-04-07 11:46 GMT
கொரோனா நிவாரணத்துக்காக இந்த நிதியாண்டுக்கான எனது ஊதியத்தில் 30 சதவிதத்தை தானாக முன்வந்து குறைக்க ஒப்புக்கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட பதிவு வருமாறு:-

கொரோனா வைரஸால் நாடு முன் எப்போதும் எதிர்பார்க்காத நெருக்கடியை எதிர்கொள்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகளவில் உருவாகிய அழிவைக் கட்டுப்படுத்த போராடுகிறது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் பல வளர்ந்த பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா திறமையான தலைமையில் கீழ் வெல்கிறது. குறிப்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா உறுதியுடன் ஒன்றிணைந்துள்ளது உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியர்கள் தங்கள் தலைவரான பிரதமர் மோடியை எவ்வளவு நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. கொரோனா காரணமாக நாடு அதிக பொருளாதார செலவில் உள்ளது. இது ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. துன்பங்களை உடன் தணிக்க பல நிவாரண நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இது ஒரு ஆரம்பம் என்பதை நாம் அறிவோம்.

இந்த நிதியாண்டுக்கான எனது ஊதியத்தில் 30 சதவிதத்தை தானாக முன்வந்து குறைக்க ஒப்புக்கொள்கிறேன். எனது சிறிய பங்களிப்பை தருவதை கடமையாக உணர்கிறேன். இந்த சிறிய பங்களிப்புக்கு தங்கள் ஆசிர்வாதங்களை கோருகிறேன்

இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.
Tags:    

Similar News