செய்திகள்
இலவச அரிசியை அன்பழகன் எம்எல்ஏ வழங்கிய காட்சி.

உப்பளம் தொகுதியில் அனைத்து குடும்பத்தினருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசி- அன்பழகன் வழங்கினார்

Published On 2020-04-07 17:12 IST   |   Update On 2020-04-07 17:12:00 IST
கொரோனா தொற்று பரவாமல் இருக்க உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தலா 5 கிலோ இலவச அரியை அன்பழகன் எம்எல்ஏ வழங்கினார்.

புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதனால் உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தலா 5 கிலோ இலவச அரிசியை வீடுகள் தோறும் சென்று அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கி வருகிறார்.

தொகுதிக்குட்பட்ட ஆட்டுபட்டியில் 5 கிலோ இலவச அரிசி வழங்கும் பணியை தொடங்கினார். தொடர்ந்து ரோடியர் பேட் பகுதியிலும் வழங்கினார்.

இதனையடுத்து தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் வீடுவீடாக சென்று நேரடியாக இலவச அரிசியை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்க உள்ளார்.

Similar News