செய்திகள்
குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்

கொரோனா தடுப்பு பணிக்காக குன்னம் எம்.எல்.ஏ. ரூ.21 லட்சம் நிதியுதவி

Published On 2020-04-02 14:07 GMT   |   Update On 2020-04-02 14:07 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று செந்துறை தாலுகாவில் கொரோனோ தடுப்பு பணிக்காக தனது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ.20 லட்சமும், உடனடி அவசர தேவைக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சமும் வழங்கினார்.

செந்துறை ராயல் சிட்டி பகுதியில் குடியிருக்கும் நரிக்குறவர்கள் உணவின்றி தவித்து வந்தனர். அங்கே 26 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் வசித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் அங்கு நேரில் வந்து உணவின்றி தவித்த 26 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கி உதவினார். 

இந்த நிகழ்ச்சியின்போது செந்துறை ஒன்றிய செயலாளர்கள் உதயம் ரமேஷ், சந்திரகாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, சிவாஜி, ஊராட்சி செயலளர் அமிர்தலிங்கம்  ஆகியோரிடம் அரசு சார்பில் இப்பகுதியில் வசிக்கும் நரிகுறவர் இன மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News