செய்திகள்
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவி

கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடும் பள்ளி மாணவி

Published On 2020-04-02 19:08 IST   |   Update On 2020-04-02 19:08:00 IST
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவி சார்ட் பேப்பர்களில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுவற்றில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷாலினி. இவர் சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புதுப்பாளையத்தில் கிராம மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக இருந்தனர்.  இதை பார்த்த மாணவி ஷாலினி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘சார்ட்’ பேப்பர்களில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, அவற்றை மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுவற்றில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

மேலும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எடுத்து கூறினார். மாணவியின் செயல் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Similar News