செய்திகள்
கிருமி நாசினி கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்ட காட்சி

கொரோனா வைரசை கட்டுப்படுத்த கிராமங்களில் கிருமி நாசினி தெளிப்பு

Published On 2020-04-01 09:29 GMT   |   Update On 2020-04-01 09:29 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உட்பட்ட தெருக்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஆண்டிமடம்:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி மஞ்சள்தூள், அரைத்த வேப்பிலை, கற்றாழை, கிருமி நாசினி ஆகியவற்றை கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டது. கூவத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு கட்டத்திற்குள் நின்று காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக ஒரு பொது இடத்தில் உழவர் சந்தை திறக்கப்பட்டது.

கவரபாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அத்தியூர், புதுப்பேட்டை, இந்திராநகர், அத்தியூர்குடிகாடு ஆகிய கிராமங்களில் பா.ஜ.க. சார்பில் 500 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இதேபோல் அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
Tags:    

Similar News