செய்திகள்
சிதம்பரத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ்சை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்.

கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Published On 2020-03-12 09:46 GMT   |   Update On 2020-03-12 09:46 GMT
சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது.
சிதம்பரம்:

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலக மக்களையே அச்சுறுத்தி உள்ளது.

தற்போது சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆலோசனையின் படி அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளில் கிருமிநாசினி தெளித்து பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் மண்டலம் சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags:    

Similar News