செய்திகள்
தற்கொலை

ஈரோடு அருகே கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2020-03-01 16:50 IST   |   Update On 2020-03-01 16:50:00 IST
ஈரோடு அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 25). இவர் ஈரோடு ஈ.பி.பி. நகரைச் சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோகுல் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். மேலும் தனது தங்கை கருவுற்றது குறித்து யாரும் என்னிடம் கூறவில்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு கோகுல் தனது மனைவி குழந்தையுடன் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென கண்விழித்துப் பார்த்த தேவி தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோகுல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News