செய்திகள்
கோப்பு படம்

ஆசனூர் அருகே மலைப்பகுதியில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

Published On 2020-02-28 15:05 GMT   |   Update On 2020-02-28 15:05 GMT
ஆசனூர் அருகே பால்டேங்கர் லாரி சாலை ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதால் கர்நாடகா எல்லையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு:

தர்மாபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருந்து தாளவாடி அடுத்த கரளவாடியில் உள்ள பால் குளிரகத்திக்கு பால் ஏற்ற டேங்கர் லாரி ஒன்று வந்தது.

லாரியை சண்முகம் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று ஆசனூரை அடுத்த செம்மண் திட்டு என்ற பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் வந்தது.

அந்த காருக்கு வழி விட்டார். இதில் எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்து பால்டேங்கர் லாரி சாலை ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் பள்ளத்தில் விழுந்த டேங்கர் லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டது. நீண்ட நேரத்துக்கு பின் லாரி பள்ளத்தில் இருந்து மீக்கப்பட்டது.

இதனால் தமிழகம் கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News