செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

வேலூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-02-13 11:37 GMT   |   Update On 2020-02-13 11:37 GMT
வேலூர் அருகே 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அப்பகுதி சமூகநல அலுவலர், சைல்டுலைன் களப்பணியாளர் மற்றும் வேலூர் தாலுக்கா போலீசார் ஆகியோர் நேற்று இடையஞ்சாத்து பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது 9-வது படிக்கும் 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமண ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம், அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டனர்.

தொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
Tags:    

Similar News