செய்திகள்
கோப்பு படம்

பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து அரியலூர் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-05 12:22 GMT   |   Update On 2020-02-05 12:22 GMT
அரியலூர் அருகே எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடக்கோரி எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர், அகில இந்திய முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

அரியலூர் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர், வளர்ச்சி அதிகாரி சங்கத்தினர், அதிகாரிகள் சங்கம் சார்பில் 1மணி நேரம் வெளிநடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் செல்வி தலைமை தாங்கினார். முதல் நிலை அதிகாரிகள் சங்க கார்த்திகேயன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க நந்தகுமார், அகிலஇந்திய முகவர்கள் சங்க ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

இதேபோல் அரியலூர் எல்.ஐ.சி.கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி.யின் பங்குகளை தனி யாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரியும், பாலிசிதாரர்களுக்கு போனஸ் உயர்த்தி கொடுக்க கோரியும், ஆன்லைன் வர்த்தகத்தை கைவிடக்கோரியும் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கிருஷ்ணன் முன்னிலையில் வகித்தார். இதில் அருமைகண்ணு, மணவாளன், நந்தகுமார், ராம்ஜி, சந்திரகுமார், நெடுஞ்செழியன், சுகவனேஸ்வரர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News