செய்திகள்
கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Published On 2020-02-03 17:48 GMT   |   Update On 2020-02-03 17:48 GMT
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 5 கடைகளில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் ரோட்டில் அமைந்துள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து மீன், இறைச்சி கழிவுகளை மழைநீர் செல்லும் கால்வாய் மற்றும் சாலையில் கொட்டுவது போன்ற செயல்களால் சுகாதாரகேடு ஏற்படுகிறது என கிடைத்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அறச்செல்வி தலைமையில், சுகாதார ஆய்வாளர் சிவராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் மீன், இறைச்சி கழிவுகளை மூடியிட்ட பேரல் தொட்டியில் வைத்து நகராட்சி வாகனம் வரும் நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதற்காக அவர்களுக்கு நகராட்சி மூலம் நோட்டீசும் வழங்கப்பட்டது. பின்னர் கடை மற்றும் வியாபாரிகளிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாழை இலை, தேக்க இலை, துணி பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 5 கடைகளில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
Tags:    

Similar News