செய்திகள்
திருநாவுக்கரசர்

வன்முறை குறித்து ரஜினி பேசியது சரியானதுதான்- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

Published On 2019-12-22 19:00 IST   |   Update On 2019-12-22 19:00:00 IST
வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சரியானதுதான் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் கூட்டணி தர்மம் அடிப்படையில் கூட்டணி கட்சி எந்த வேட்பாளரை அறிவித்துள்ளதோ? அவரை வெற்றி பெற வைக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் வன்முறை குறித்து பேசியது சரியானதுதான். வன்முறையை யாரும் அனுமதிக்க முடியாது. குடியுரிமை சட்டம் குறித்து என்ன சொல்ல வருகிறார் என்பதை ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி சட்ட திருத்தங்களை செய்து மீண்டும் அமல்படுத்தலாம்.


இந்த போராட்டத்தை தி.மு.க.வும், காங்கிரசும்தான் தூண்டிவிடுகின்றன என்று சொல்வது தவறு. தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை பிசுபிசுக்க வைப்பதற்காக இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பலனில்லை.

போராட்டத்தை திசை திருப்பவே இது போன்ற செயல்களில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. அடிமை அரசான அ.தி.மு.க.வும் துணை போயுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது சாத்தியமா? என்று தெரியவில்லை. ஆனால் தமிழக முதல்வர் சட்டம் தெரியாமல் இரட்டை குடியுரிமைக்கு வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News