செய்திகள்
முதுமலையில் கம்பீரமாக நடந்து வந்த புலி.

முதுமலையில் கம்பீரமாக நடந்து வந்த புலி - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

Published On 2019-11-22 06:00 GMT   |   Update On 2019-11-22 06:00 GMT
முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று கம்பீரமாக நடை நடந்து வந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஊட்டி:

ஊட்டி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திபூர் புலிகள் காப்பகம், இந்தியாவின் சிறந்த புலிகள் காப்பகங்களாக திகழ்ந்து வருகின்றன.

புலிகளை பாதுகாக்க மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக இந்த இரண்டு புலிகள் காப்பகங்களிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட புலிகளும், பந்திபூர் புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகளும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று கம்பீரமாக நடை நடந்து வந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிறிது நேரம் வனப்பகுதில் உள்ள சாலையில் நடந்து வந்த புலி பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

Tags:    

Similar News