செய்திகள்
மின் நிறுத்தம்

கள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-11-19 16:06 IST   |   Update On 2019-11-19 16:06:00 IST
கள்ளுக்கடை மேடு பகுதியில் நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

ஈரோடு:

காசிபாளையம் 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ சென்னிமலை ரோடு மின் பாதையில் புதிததாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சென்னிமலை ரோடு, கல்யாண சுந்தரம் வீதி, தொழிற்பேட்டை, பெரிய தோட்டம், விவேகானந்தர் நகர், ஆவன் கால்நடை தீவனக் கிடங்கு, எச்டி. எஸ்.சி.-1, பழைய ரெயில் நிலையம் ரோடு, கள்ளுக்கடை மேடு, ஜீவானந்தம் ரோடு, நேதாஜி ரோடு, மரப்பாலம் ரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

Similar News