செய்திகள்
கோப்பு படம்

நீலகிரியில் பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு

Published On 2019-11-06 10:55 GMT   |   Update On 2019-11-06 10:55 GMT
நீலகிரியில் பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவைகளை உடனடியாக மூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டடுள்ளது.
ஊட்டி:

நீலகிரியில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரியின் சுற்று சூழலை பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறு குறித்து கள ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.

அதன்படி, மாவட்டத்தில், 883 ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஊட்டி 40, குன்னூர் 10, கோத்தகிரி, 7, கூடலூர், 20 என, மொத்தம், 77 பயனற்று கிடக்கும் ஆழ் துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவைகளை உடனடியாக மூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரியில் நடந்த ஆய்வின் போது கண்டறியப்பட்ட பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி வேகமாக நடந்து வருகிறது என்றார்.
Tags:    

Similar News