செய்திகள்
கோப்பு படம்

நீலகிரி: பந்தலூர், தேவாலாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2019-10-31 14:45 GMT   |   Update On 2019-10-31 14:45 GMT
நீலகிரி பந்தலூர் தாலூகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ‘மகா’ புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இரவு பகலாக மழை கொட்டி தீர்த்தது. 23 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மகா’ புயல் லட்சத்தீவுக்கு மேலே திருவனந்தபுரத்தில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மாலத்தீவில் இருந்து விலகி வடக்கு வடமேற்கு திசையில் சென்று, அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. அரபிக்கடலின் உள்பகுதிக்கு புயல் செல்வதால், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்தார்.

இந்நிலையில், கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக நீலகிரியில் பந்தலூர், தேவாலாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அவித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News