பெருந்துறையில் விபத்து- மருந்துக்கடை அதிபர் உடல் நசுங்கி பலி
பெருந்துறை:
பெருந்துறை அகே உள்ள சோளி பாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 45). இவர் பெருந்துறை புதிய பஸ் நிலையம் உள்ளே மருந்து கடை வைத்து நடத்தி வந்தார். வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு தனசேகர் தனது மோட்டார் சைக்கிளில் சோளி பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பவானி பைபாஸ் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனசேகர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
விபத்தில் பலியான மருந்து கடை உரிமையாளர் தன சேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.