செய்திகள்
விபத்து

ஆப்பக்கூடல் அருகே 2 மொபட்டுகள் மோதல்- கட்டிட தொழிலாளி பலி

Published On 2019-10-28 17:06 IST   |   Update On 2019-10-28 17:06:00 IST
ஆப்பக்கூடல் அருகே 2 மொபட்டுகள் திடீரென மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள சிந்த கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு (வயது 25). கட்டிட தொழிலாளி.

நேற்று இரவு 8 மணி அளவில் இவர் மொபட்டில் ஆப்பக்கூடலில் இருந்து ஆ.புதுப்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். எதிரே மற்றொரு மொபட் வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மொபட்டுகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யாவு பவானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிறகு சேலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News