செய்திகள்
டெங்கு ஒழிப்பு கூட்டம்

டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2019-10-19 18:28 GMT   |   Update On 2019-10-19 18:28 GMT
கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
கல்லல்:

கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் டெங்கு ஒழிப்பு தினம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். இதில் பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது குறித்தும், சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவது, டெங்கு வராமல் தடுக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் செல்வி, சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், பிரதீப், வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News