செய்திகள்
டெங்கு காய்ச்சல்

மதுரை-சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த 22 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-10-16 05:46 GMT   |   Update On 2019-10-16 05:46 GMT
மதுரை, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு காரணமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 47 பேர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டத்தில் 7 பெண்களுக்கும், 5 ஆண்களுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 12 பேருக்கும் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது வைரஸ் காய்ச்சலால் பாதித்த மற்ற 35 பேருக்கும் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு தனி வார்டில் சுழற்சி முறையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கும் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News