செய்திகள்
இந்திய எழுத்தை அழித்து திமுக தொழில்நுட்ப பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழித்து தி.மு.க.வினர் போராட்டம்- 22 பேர் கைது

Published On 2019-09-18 13:03 GMT   |   Update On 2019-09-18 13:03 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தியாவை பொருத்தவரை நாட்டின் ஒரு மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று கருத்து கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திமுகவினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம்:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தியாவை பொருத்தவரை நாட்டின் ஒரு மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று கருத்து கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியாத்தம் ரெயில் நிலையத்தில் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம் தலைமையில் இன்று மதியம் மாணவர்கள், இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது ரெயில் நிலைய பிளாட்பார பலகையில் எழுதப்பட்டிருந்து இந்தி எழுத்துக்களை கறுப்பு மையிட்டு அழித்தனர். 

தொடர்ந்து இந்திக்கு எதிராக பதாகைகளை ஏந்தி இந்தியை எதிர்ப்போம் தமிழை காப்போம் என கோஷமிட்டபடி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தண்டபாணி, சிங்காரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர். 
இதனால் குடியாத்தம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News