செய்திகள்
ஈரோட்டில் முதல்முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
ஈரோட்டில் முதல் முறையாக திருத்தப்பட்ட புதிய வாகன மோட்டார் சட்டத்தின்படி குடித்து விட்டு மற்றும் வாகன ஓட்டுனர் உரிமையின்றி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கு போலீசார் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு:
புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த புதிய வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை இந்த சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இருப்பினும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் புதிய வாகன ஓட்ட சட்டத்தின்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் முதல் முறையாக திருத்தப்பட்ட புதிய வாகன மோட்டார் சட்டத்தின்படி குடித்து விட்டு மற்றும் வாகன ஓட்டுனர் உரிமையின்றி மோட்டார் சைக்கிளில் வந்த ஈரோடு வாலிபர் ராஜா என்பவருக்கு போலீசார் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு டவுன் போலீஸார் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ராஜா வந்தார்.
வாலிபர் ராஜாவை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் மது அருந்தி வந்திருப்பதும், வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு ரூ . 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.