செய்திகள்
மரணம்

நம்பியூரில் வி‌ஷக்காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2019-09-16 09:36 IST   |   Update On 2019-09-16 09:36:00 IST
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் விஷக்காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் ரங்கநாதபுரம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் விகாசினி (வயது 14). விகாசினி நம்பியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக நம்பியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

மாணவிக்கு தொடர்ந்து காய்ச்சல் அடிக்கவே மீண்டும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி விகாசினிக்கு வி‌ஷக்காய்ச்சல் இருப்பதாக கூறினர்.

உடனடியாக மாணவியை ஆம்புலன்சு மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி விகாசினி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வி‌ஷக்காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News