செய்திகள்
லஞ்சஒழிப்பு சோதனை நடத்திய போது ஊழியர்கள் எங்கும் போக விடாமல் அப்படியே உட்கார சொல்லி உத்தரவு

சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Published On 2019-09-13 05:19 GMT   |   Update On 2019-09-13 05:19 GMT
சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன் வேகமாக ஒரு கார் நின்றது.

காரிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பிறகு அவர்கள் யாரும் எங்கும் போகக்கூடாது. அனைவரும் உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே உட்காருங்கள் என்று உத்தரவிட்டனர்.

சார்பதிவாளர் அலுவலக கதவும் இழுத்து சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காரில் வந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த அதிரடி சோதனை நள்ளிரவு 11.30 மணி வரை 6 மணி நேரம் நடந்தது.

நேற்று மட்டும் 92 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதே சமயம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

Tags:    

Similar News