செய்திகள்
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

ஆரணி புதிய மாவட்டம் ஆக்கப்படும்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

Published On 2019-08-30 10:36 GMT   |   Update On 2019-08-30 10:36 GMT
ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும். இதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

ஆரணி:

ஆரணியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினார். நிகழச்சியில் அவர் பேசியதாவது:-

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என 50 ஆண்டுகால கோரிக்கை மக்களிடையே எழுந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தின் மைய பகுதியில் ஆரணி உள்ளது. வந்தவாசி, ஆரணி, போளூர், செய்யாறு, ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம் ஆகிய 6 தாலுகாக்களை கொண்டு ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அது விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும். விரைவில் ஆரணி புதிய மாவட்டமாக உருவாகும். இதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News