செய்திகள்
மாயம்

லால்குடியில் அங்கன்வாடி பெண் ஊழியர் மாயம்- மகன் போலீசில் புகார்

Published On 2019-08-29 20:25 IST   |   Update On 2019-08-29 20:25:00 IST
லால்குடியில் வேலைக்கு சென்ற அங்கன்வாடி பெண் ஊழியர் மாயமானார். இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி:

திருச்சி அருகே உள்ள லால்குடி கூகூர் நன்னிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி மலர்கொடி (வயது 40). இவர்களுக்கு சுபாஷ் சந்துரு என்ற மகன் உள்ளார். மலர்கொடி அங்கு உள்ள அங்கன் வாடி மையத்தில் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி வேலைக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தாய் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் சபாஷ்சந்துரு லால்குடி போலீசில் புகார் செய்தார். 

இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் மாயமாகி 45 நாட்கள் ஆகிவிட்டதால் அவர் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது. செல்போன் டவர் உதவியுடன் போலீசார் தேடிவருகிறார்கள்.

Similar News