செய்திகள்
அழகர்கோவிலில் அமைச்சர் வேலுமணி இன்று சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

அழகர்கோவிலில் அமைச்சர் வேலுமணி சாமி தரிசனம்

Published On 2019-08-29 12:11 GMT   |   Update On 2019-08-29 12:11 GMT
மதுரை அழகர்கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் வேலுமணி பொய்கைகறை பட்டியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலூர்:

மதுரையில் இன்று மண்டல அளவிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று காலை மதுரை வந்தார். அழகர் கோவிலுக்கு சென்ற அவர் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் தீர்த்த மாடினார். பின்னர் சோலை மலை முருகன் கோவிலில் செய்தார்.

இதைத்தொடர்ந்து மலையடி வாரத்துக்கு வந்த அவர் பதினெட்டாம்பட்டி கருப்பசாமியை தரிசனம் செய்தார். அப்போது ஆளுயர அரிவாளை நேர்த்திக்கடனாக அமைச்சர் வழங்கினார். இதனை தொடர்ந்து வேலுமணி, சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று கள்ளழகரை தரிசனம் செய்தார். முன்னதாக அழகர் கோவிலுக்கு வந்த அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மாவட்ட செயலாளர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், ஆவின் சேர்மன் தமிழரசன், பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் துரைப்பாண்டி ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, முன்னாள் சேர்மன் சாகுல்அமீது மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பொய்கைகரைப்பட்டியில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News