செய்திகள்

சத்யா எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு- சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-05-14 09:50 GMT   |   Update On 2019-05-14 09:50 GMT
அ.தி.மு.க. உறுப்பினரை வழி மறித்து தாக்கியது தொடர்பாக சத்யா எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கடலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த மார்ச் 4-ந்தேதி எங்கள் பகுதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எனது நண்பர் மணிகண்டனுடன் சென்றேன்.

அப்போது பண்ருட்டி அ.தி.மு.க. பெண் எம்.எல்ஏ. சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் அங்கு வந்தனர். அவர்கள் என்னையும், நண்பரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அங்கிருந்து தப்பி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றோம். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தேன்.

ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர். எம்.எல்.ஏ.வுக்கு எதிராக புகார் செய்தால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் எங்களை மிரட்டுகிறார்கள்.

எனவே எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அப்போது மனுதாரர் புகார் மனு மீது 4 வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடத்தும்படி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News