செய்திகள்
வீரப்பன்சத்திரம் கழிவு நீர் கால்வாயில் கிடந்த ஆண் பிணம்- போலீசார் விசாரணை
வீரப்பன்சத்திரம் கழிவு நீர் கால்வாயில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பவானி மெயின் ரோடு பழைய காமதேனு கல்யாண மண்டபம் எதிர்ப்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
இறந்தவர் சிவப்பு ஊதா கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், ஊதா பிரவுன் கலர் கட்டம் போட்ட லூங்கியும் அணித்திருந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.