செய்திகள்

ஈரோடு அருகே வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்

Published On 2019-04-03 17:22 IST   |   Update On 2019-04-03 17:22:00 IST
ஈரோடு அருகே வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது25).

அருள்குமார் சம்பவத்தன்று கமலா நகர் பழைய மாட்டுச்சந்தை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பத்ம நாதன் (28), விஜயன் (25) கிஷோர் (29) ஆகியோர் அருள்குமாரிடம் 500 பணம் கேட்டு மிரட்டினர்.

மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் கை கால்களை முறித்து ஆற்றில் வீசி விடுவோம் என்றும் மிரட்டினார்களாம்.

இதுகுறித்து அருள்குமார் ஈரோடு கருங்கல் பாளையம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News