செய்திகள்

காதலர் தினத்தில் காதலர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை

Published On 2019-02-13 16:10 IST   |   Update On 2019-02-13 16:10:00 IST
காதலர் தினத்தை முன்னிட்டு நாளை காதலர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். #ValentinesDay
வேலூர்:

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காதலர் தினத்தை முன்னிட்டு நாளை 14-ந் தேதி வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள் மற்றும் உணவகங்களில் காதலர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்புகளானது பொதுமக்கள் மற்றும் காதலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ValentinesDay
Tags:    

Similar News