செய்திகள்

முந்தி செல்வதில் தகராறு: மாநகர பஸ் டிரைவர் மீது தாக்குதல்- 5 வாலிபர்கள் தப்பி ஓட்டம்

Published On 2019-01-20 09:22 GMT   |   Update On 2019-01-20 09:22 GMT
முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்கள் மாநகர பஸ் டிரைவரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்கள். போலீசார் அவர்களை தேடிவருகிறார்கள்.
பெரம்பூர்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து காரனோடை நோக்கி நேற்று மாலை மாநகர பஸ் (எண்.57 எஃப்) சென்றது. டிரைவர் சுரேஷ் குமார் பஸ்சை ஓட்டினார். பேருந்து வியாசர்பாடி, சர்மா நகரில் சென்று கொண்டிருந்தபோது முந்தி செல்வது தொடர்பாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களுக்கும் பஸ் டிரைவர் சுரேஷ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களும் திடீரென பஸ்சை வழி மறித்து பஸ்சுக்குள் ஏறி டிரைவர் சுரேஷ் குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் டிரைவர் சுரேஷ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 5 வாலிபர்களை தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News