செய்திகள்
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

Published On 2018-12-06 07:23 GMT   |   Update On 2018-12-06 07:23 GMT
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்த கடலோர காவல் படையினர் அவர்களை சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். #Srilankanfishermen #Arrested
ராயபுரம்:

இந்திய கடலோர காவல் படையினர் ஐ.சி.ஜி.எஸ். ஆனந்த் கப்பலில் தமிழக- ஆந்திரா எல்லை ககல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த விசைப்படகில் 5 மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் 5 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த ரோகன்பெரைரா, அந்தோணி பெர்னாண்டோ, பெரைரா, பெருமாள்ராஜ், சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் இன்று அதிகாலை கரைக்கு கொண்டு வந்து சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Srilankanfishermen #Arrested

Tags:    

Similar News