செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் மர்மகாய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2018-10-31 14:01 IST   |   Update On 2018-10-31 14:01:00 IST
ஒட்டன்சத்திரத்தில் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #MysteryFever #Death
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் 15-வது வார்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்ராம். பந்தல் தொழிலாளி. இவரது மனைவி காளிம்மாள்(வயது35). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

சிகிச்சைக்குபின் வீடு திரும்பிய காளியம்மாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவஅதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த காய்ச்சல் கண்டவர்கள் கண் எரிச்சல், வாந்தி-பேதி, மூட்டுவலி உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். தேவத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது ஒட்டன்சத்திரம் பகுதியில் மர்மகாய்ச்சலுக்கான அறிகுறி இல்லை. இருந்தபோதும் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றனர். #MysteryFever #Death


Tags:    

Similar News