செய்திகள்

வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

Published On 2018-10-18 10:08 GMT   |   Update On 2018-10-18 10:08 GMT
அந்தமான் மற்றும் வங்கக் கடலில் வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRains #LowPressureArea #IMD
புதுடெல்லி:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு வருமாறு:-

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. 

அக்டோபர் 23ம் தேதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும்.  மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNRains #LowPressureArea #IMD
Tags:    

Similar News