செய்திகள்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சுப்பிரமணியன் சுவாமி, கமல் வரவேற்பு

Published On 2018-09-28 06:50 GMT   |   Update On 2018-09-28 06:50 GMT
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்பிரமணியன் சுவாமி, கமல் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர். #SabarimalaVerdict #SubramaniamSwamy
சென்னை:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா உள்ளிட்ட 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மத வழிபாடுகளை நிதிமன்றம் முடிவு செய்யக்கூடாது என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும், மெஜாரிட்டி  நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம்போர்டு கூறியுள்ளது.



இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதுரை ஆதீனம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சபரிமலையில் பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு நல்ல முடிவு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். கடவுள் அனைவருக்கும் சமமானவர். போகவேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம் என்று கூறியுள்ள கமல், கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். #SabarimalaVerdict #SubramaniamSwamy
Tags:    

Similar News