செய்திகள்

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

Published On 2018-09-27 18:05 IST   |   Update On 2018-09-27 18:05:00 IST
மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் பொடி முருகன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு ஆனந்தி (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதற்கிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போல் இவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தியை பொடிமுருகன் கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொடிமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். பின்னர் மனைவியுடன் சமாதானமாகி ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பொடிமுருகனுக்கும், மனைவி ஆனந்திக்கும் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொடி முருகன் சரமாரியாக ஆனந்தியை தாக்கினார். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதுகுறித்து ஆனந்தி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து பொடிமுருகனை கைது செய்தார்.

Tags:    

Similar News