செய்திகள்

புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்- நாராயணசாமி பேச்சு

Published On 2018-09-26 10:53 GMT   |   Update On 2018-09-26 10:53 GMT
புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பாராட்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசினார். #narayanasamy #puducherrygovernment

புதுச்சேரி:

அகில இந்திய வணிகர் சம்மேளன துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கருக்கு பாராட்டு விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.

புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பழனி அடைக்கலம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பாலு வரவேற்றார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசங்கருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார். அவர் பேசும்போது:-

புதுவை வியாபாரிகள் தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறார்கள். புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தெற்குமாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்குமாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு விசுவநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி தேவபொழிலன், தமிழ்ச்சங்க தலைவர் முத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் பாபு, அன்பழகன், சரவணன், கணேசன், ஆறுமுகம், அனில்குமார், கலீல் ரகுமான், சித்திக்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார்.  #narayanasamy #puducherrygovernment

Tags:    

Similar News