செய்திகள்
சிதம்பரத்தில் கிணற்றில் விழுந்த சையத் சபிர் அகமதுவை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

சிதம்பரத்தில் கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

Published On 2018-09-01 11:39 GMT   |   Update On 2018-09-01 11:39 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
கடலூர்:

சிதம்பரம் பெரிய காஜியார் தெருவைச் சேர்ந்தவர் சையத்சபிர் அகமது (வயது 65). இவர் தனது வீட்டின் பின்புறம் விளங்கியம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வீட்டின் பின் படிக்கட்டு வழியாக இன்று காலை சென்றார்.

அப்போது வீட்டின் தோட்டத்தில் இருந்த 40 அடி ஆழம் உள்ள தரை கிணற்றில் மேல் மூடியிருந்த சிமெண்ட் கட்டையிலே ஏறி சென்றார். அப்போது அந்தக் கட்டை உடைந்து கிணற்றுக்குள் சையத் சபிர்அகமது விழுந்தார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு அவரின் உறவினர்கள் கிணற்றுக்குள் விழுந்து கிடந்த சையத்சபிர் அகமதுவை மீட்க முயன்றனர். முடியவில்லை.

உடனே இதுபற்றி சிதம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிதம்பரம் தீயணைப்பு துறை அதிகாரி புருஷோத்தமன் மற்றும் காவலர்கள் சக்திவேல் கணேஷ் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்து கிடந்த சையத்சபிர்அகமதுவை மீட்டனர்.

பின்னர் அவரை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News