செய்திகள்

வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2018-08-24 06:44 GMT   |   Update On 2018-08-24 06:44 GMT
வட சென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திபட்டுபுதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டு நிலைகள், ஐந்து அலகுகள் மூலம் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுவந்தன. இந்த நிலையில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் 1620 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

கொதிகலன் குழாய் பழுதினை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News