செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே தோட்ட பயிர்களை நாசமாக்கும் கரடிகள்

Published On 2018-08-23 11:54 GMT   |   Update On 2018-08-23 11:54 GMT
ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை கரடிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மயிலாடும்பாறை, பொன்னம்படுகை, அரசரடி, கொங்கரவு, பழையகோட்டை, வண்டியூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியிலேயே வீடுகட்டி விவசாயிகள் காவலுக்கு இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கிலி மலைப்பகுதியில் உணவுதேடி வந்த கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்தன. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

தற்போது பழையகோட்டை வண்டியூர் பகுதியில் கரடிகள் தோட்டப்பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் கரடிகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News