செய்திகள்

ஈரோடு பெரியார்நகரில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபட் மாயம்

Published On 2018-08-18 15:56 IST   |   Update On 2018-08-18 15:56:00 IST
ஈரோடு பெரியார்நகரில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபட் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு செல்லமுத்து தோட்டம் , சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி பிரியா (வயது45). டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

பிரியா சம்பவத்தன்று பெரியார் நகரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது மொபட்டில் அவரது வீட்டுக்குச் சென்றார். வீட்டின் வெளியே மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் உறவினரை சந்தித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மொபைட் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.யாரோ மர்ம நபர் நோட்டமிட்டு மொட்டை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரியா ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News