செய்திகள்

ஏ.கே.போஸ் மரணம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். இரங்கல்

Published On 2018-08-02 11:38 IST   |   Update On 2018-08-02 11:38:00 IST
திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AKBoseDeath #ThiruparankundramMLA #ADMK
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.

புரட்சித் தலைவி மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு ஏ.கே.போஸ் மதுரை மாநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர், மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணியாற்றியதோடு, 2006-ல் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 2011-ல் மதுரை வடக்கு தொகுதியிலும், 2016-ல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி உள்ளார்.

அன்புச் சகோதரர் ஏ.கே.போசை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர். #AKBoseDeath #ThiruparankundramMLA #ADMK

Tags:    

Similar News