செய்திகள்

சமயநல்லூர் அருகே ஆம்புலன்சு மோதி இலை வியாபாரி பலி

Published On 2018-07-26 10:18 GMT   |   Update On 2018-07-26 10:18 GMT
சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்சு மோதிய விபத்தில் இலை வியாபாரி பலியானார்.

வாடிப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவர் மதுரையில் இலை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று முருகன் தனது மொபட்டில் மதுரைக்கு புறப்பட்டார். சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புலி 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சு எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அதே ஆம்புலன்சில் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News