செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி - சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2018-07-25 17:50 IST   |   Update On 2018-07-25 17:50:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணியினை சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். #Wastewatercanal

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மேட்டு தெருவில் இருந்து கந்தாடை தெரு வழியாக இருபுறமும் செல்லும் வீடுகளில் பின்புறம் உள்ள கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக தூர்வாரபடாமல் இருந்தது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி அந்தப் பகுதி மக்கள் சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை வைத்துள்ளவர்களை சந்தித்து நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து வாருவதற்கு நடவடிக்கைக்கு தூர்வாரும் பணியினை சந்திரபிரபா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

25 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த கழிவுநீர் பாதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரை மக்கள் பாராட்டினர்.

மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாபு, பொறியாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் பிரமநாயகம், பழனி குரு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News