செய்திகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் நடத்தும் வனப்பயிற்சியாளர் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைப்பு

Published On 2018-07-13 04:55 IST   |   Update On 2018-07-13 04:55:00 IST
வனப்பயிற்சியாளர் தேர்வை அக்டோபர் 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வனப்பயிற்சியாளர் பதவிக்கு எழுத்து தேர்வுகளை செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்துவதாக அறிவித்து இருந்தது. அந்த நாட்களில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் மாதம் 28-ந்தேதி முதல் 5 நாட்கள் குடிமைப்பணிகளுக்கான முதன்மை தேர்வுகள் நடத்துவதாக அறிவித்துள்ளன.

எனவே விண்ணப்பதாரர்கள் நலன் கருதி வனப்பயிற்சியாளர் தேர்வை அக்டோபர் 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News