செய்திகள்

காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் - நீதிபதி கிருபாகரன்

Published On 2018-07-12 17:18 IST   |   Update On 2018-07-12 17:18:00 IST
காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் தேவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை :

காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் காவல் துறையினருக்கு வார விடுப்பு அவசியம் தேவை என அவர் மீண்டும் வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.

காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்து நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டுள்ளதாவது :-

வாரவிடுப்பு நாட்களிலும் காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றனர். வாரவிடுப்பு நாட்களில் பணிக்கு வந்தால் படியாக வழங்கப்படும் ரூ.200 நிறுத்தப்படுமா ?

காவல் துறையினருக்கு வார விடுப்பு அவசியம் தேவை, விடுமுறை நாட்களை காவலர்கள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஜூலை 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காவல்துறையினர் காப்பாற்ற வேண்டும், குற்றவாளிகளுடன் கவல்துரையினர் கைகோர்க்க கூடாது.

வாகனங்களில் கட்சிக்கொடிகள் மற்றும் தலைவர்களின் படங்களை வைத்து செல்லும் வாகனங்களை போலீசாரால் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? ஏன் என்றால் எந்த புற்றில்  என்ன பாம்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, கட்சி அடையாளங்களுடன் செல்லும் வாகனங்களையும் போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News